அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்.. எதிர்கட்சிகள் இரட்டை வேடம் - பவன்கல்யாண் கருத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும், தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகவும் தெலங்கானா துணை முதல்வர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. எதிர்கட்சிகள் இரட்டை வேடம் - பவன்கல்யாண் கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல்.. எதிர்கட்சிகள் இரட்டை வேடம் - பவன்கல்யாண்

சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கருத்தரங்கில் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, திமுக மீது இரட்டை வேடம் போடும் கட்சியாக குற்றம் சுமத்தியதுடன், 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் தோல்வியை நினைவுபடுத்தி, தீர்மானங்களை மறுபரிசீலனை செய்யும் போது தான் வளர்ச்சி சாத்தியம் என வலியுறுத்தினார்.

தெலங்கானா மாநில துணை முதலவர் பவன் கல்யான் சிறப்பு அழைப்பாளராக இந்த கருத்தரங்கில் பங்கேற்றார். அவர் பேசுகையில், தாங்கள் தோற்றால் ஈவிஎம் எந்திரம் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தமிழ்நாட்டுக்கும் புதிததல்ல என்றவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும் தெரிவித்தார். தந்தை ஆதரித்ததை மகன் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாகவும் தனது கூறினார்.

தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்தலால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பான தனது எண்ணத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தன்னையும் தென்னக மாநிலத்தை சேர்ந்தவராகக் குறிப்பிடும் பவன், தேசிய ஒருமைப்பாட்டிற்கான தேர்தல் திட்டங்களை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை பேச்சில் வெளிப்படுத்தினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்கூட்டியே திமுக தலைவர் கருணாநிதி ஆதரித்ததை அவர் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொண்டு வருவதற்கு ஆதரவை தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பவன் கல்யாணின் கருத்துகள், திமுகவின் தற்போதைய நிலைப்பாட்டுடன் முரண்பட்டதாக இருக்கலாம். இது, திமுகவின் இரட்டை வேடம் போடும் அரசியல் அணுகுமுறையை குறிப்பதாக உள்ளதாக கூறினார்.