உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து, அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் மக்கள் நீதி மையத்தின் பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதற்கு ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “காவல்துறை நடவடிக்கை எப்போதும் ஒருதலைபட்சமாக இல்லாமல் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தவறாக யார் நடந்திருக்கிறார்களோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்கள் நீதி மையம் தற்போது திமுகவின் கூட்டணியில் உள்ள நிலையில் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தித்துள்ளனர். காவல்துறை முறைப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் எல்லோரும் தெள்ள தெளிவாக இருக்கின்றனர். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போதைய சூழலில் திமுக ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மேலும், திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. 2026 தேர்தல் திமுகவுக்கு மிக மோசமான ஒரு தேர்தலாக இருக்கும்.” என்றார்.
தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு, “ கூட்டணி குறித்த முடிவுகளை தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்த்துக் கொள்வார். கட்சியின் கருத்துக்களையும் என்னுடைய கருத்துக்களும் ஏற்கனவே கூறிவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.