தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவர் முகாமினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம். ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சீத்சிங் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததை பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், “புரோட்டாகால்படி தேனி மக்களவையின் உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் வைக்க வேண்டும். எதற்கு பேனரில் எனது புகைப்படம் இல்லை” என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது "எனது தொகுதியில் நான்தான் வழங்குவேன்” என நலத்திட்ட அட்டையை தங்க எம்பி தமிழ்செல்வனிடம் இருந்து மகாராஜன் எம்எல்ஏ பிடுங்கினார். இதனால் தங்க தமிழ்செல்வனுக்கும் மகாராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே தொடக்க விழா முடிக்கப்பட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னர் மருத்துவ முகாம் மட்டும் நடைபெற்றது. பொதுமேடையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.