அரசியல்

“டெல்லிக்கு சென்றால் திமுகவினர் தான் காவி உடை அணிவர்...” -முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்

திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.

“டெல்லிக்கு சென்றால் திமுகவினர் தான் காவி உடை அணிவர்...” -முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்

கருணாநிதி காவி உடை அணிந்தவர்

கோடை காலத்தையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் 100 அடிக்கு பந்தல் அமைத்து குளிர்ச்சியூட்டும் பழ வகைகளையும், குளிர்பான வகைகளையும் கொண்டு பிரமாண்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

சட்டப்பேரவைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உட்பட கருப்பு உடை அணிந்து வந்ததற்கு,நல்ல வேளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்தார்கள்...காவி உடை அணிந்து வரவில்லை என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், “முன்னாள் முதல்வரும், இன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அப்பாவுமான கருணாநிதி காவி உடை அணிந்தவர் தான்.

அன்று திமுக எதிர்த்தது

முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் வெள்ளை உடையும், மாலையில் காவி உடையும் அணிவதும், திமுக அமைச்சர் தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் போது வெள்ளை உடையும், டெல்லி சென்றால் காவி உடை அணிவது அணிவார்கள்” என்றார். மேலும், தான் திருடி பிறரை நம்மாள் என கூறியது போல் இருக்கிறது எனவும் விமர்சனம் செய்தார்.

மேலும் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியின் உச்சமான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும் . இதேபோன்று ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சி காலத்தில் பல்கலைகழகங்களில் முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டுமென சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்ற முற்பட்ட போது எதிர்த்தது திமுக. இன்று முதலமைச்சரின் கோரிக்கை உச்சநீதி மன்ற தீர்ப்பில் நிறைவேறிவிட்டது என இருமாப்பு கொள்கிறார்கள்.

திமுக இரட்டை நாடகம்

அன்றே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், இந்த பிரச்னை இருந்து இருக்காது என தெரிவித்தார். மேலும், திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.