அண்ணாவின் பிறந்தநாள், பெரியாரின் பிறந்தநாள், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து, ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் திமுகவின் முப்பெரும் விழா, இந்த ஆண்டு கரூரில் இன்று (செப். 17) நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழா விவரங்கள்
கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்டச் செயலாளருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார். மேலும், கட்சிப் பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, கனிமொழி, அந்தியூர் ப. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விருதுகள் வழங்கல்
மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்பி-க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டமன்ற முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இந்த விழாவையொட்டி, எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 3,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.