கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்
அதில், "கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.
எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது.
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.