சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். மேலும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “நானும் ஒரு விவசாயி தான். விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு தெரியும். விவசாயம் கடினமான பணி, அதில் ஈடுபட்டவர்களுக்கு தான் அது தெரியும். எ தாய் தனது பிள்ளைகளை பராமரிப்பது போல விவசாயிகள் பயிர்களை பராமரித்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள 14,000 ஏரிகளில் 6290 ஏரி குளங்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரி நடவடிக்கை எடுத்தோம்.
கால்நடை விவசாயிகளுக்காக சேலத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவும் ஆராய்ச்சி மையம் அமைக்கவும் ஆயிரம் கோடியில் கள்ளக்குறிச்சியில் ஆராய்ச்சி மையம் திட்டம் தொடங்கினோம். இதன் மூலம் வெளிநாட்டு பசு உடன் உள்நாட்டு பசு கலப்பினம் செய்யப்பட்டு உருவாக்கப்படும். இதன் மூலம் குறைந்த அளவில் பால் கொடுக்கும் பசுவில் இருந்து மாறி ஒரு பசு 40 லிட்டர் பால் வரை கொடுக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோன்று, வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நான் முதலமைச்சராக இருந்த போது அகழிகள் ஏற்படுத்தப்பட்டது. காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்தோம். மேலும், விவசாயிகளுக்கு 2428 கோடி வறட்சி நிதி கொடுத்த ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான்.
அதேபோன்று, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தொழில் நலிவு அடைந்து விட்டது என்று கூறினார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் அவர்கள் கோரிக்கை அனைத்தும் பரிசளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பசுமை வீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 10,000 வீடுகள் கட்டித் தரப்பட்டது. மேலும், இங்கு விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைத்ததும் நிறைவேற்றப்படும். எப்போதும் நாங்கள் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.