வரலாற்றில் கேவலமான செயல்
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் சதக்கதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், வக்ஃபு வாரிய சட்டம் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட ஒரு சட்டம்.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை தேடும் பாஜகவின் அற்ப அரசியல் யுக்தி இந்த சட்டம் என்றும், பாராளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வக்ஃபு வாரிய சட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வக்ஃபு வாரிய சட்டத்தை கொண்டு வந்திருப்பது அரசியல் வரலாற்றில் ஒரு கேவலமான செயலாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நல்லிணக்கத்திற்கு கேடு
மேலும், இது போன்ற செயல் பாஜக செய்வது முதல் முறையில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் இது போன்று பல விஷயங்கள் செய்திருக்கிறது. வக்ஃபு வாரிய சட்டம் விவகாரத்தில் தமிழ்நாடு பொருத்தவரையில் அரசியல் தெளிவும், மக்களின் ஒற்றுமையும் ஒரே சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அதிமுக ஒரு பலமான அரசியல் கட்சியாக இருந்த காலம் மாறி, தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வதாகவும், பாஜகவுடன் சேர்ந்த எந்த ஒரு கட்சியும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவின் இந்த செயல் தற்கொலைக்கான செயலாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக திருடர்களை நம்பி வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், அவர்கள் வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.