இந்தியா

Viral Video: உசுரு முக்கியம்.. ஹெல்மெட்டுடன் பஸ் ஓட்டிய டிரைவர்!

கேரளாவில் அரசு பேருந்நு ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video: உசுரு முக்கியம்.. ஹெல்மெட்டுடன் பஸ் ஓட்டிய டிரைவர்!
Bus driver wearing helmet in Kerala
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போராட்டத்தில் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் சென்ற கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் ஷிபு தாமஸ், தலைமையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “வேலைநிறுத்தத்தை மீறிய இயக்கப்பட்ட பேருந்துகளை போராட்டக்காரர்கள் மறித்து தாக்குகின்றனர். இன்று காலை கொள்வதில் ஒரு பேருந்து தாக்குதலுக்கு உள்ளது. அதனால் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்துள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த பேருந்தை வேலைநிறுத்தக்காரர்கள் காலையில் அடூரில் மறித்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அரசு பேருந்நு ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.