இந்தியா

லஞ்ச பணத்தில் ரூ.150 கோடி சொத்து.. மின்வாரிய என்ஜினீயர் அதிரடி கைது!

கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

லஞ்ச பணத்தில் ரூ.150 கோடி சொத்து.. மின்வாரிய என்ஜினீயர் அதிரடி கைது!
Electricity Authority engineer arrested for embezzling Rs. 150 crore in bribe money
மின் இணைப்பு வழங்குவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று, வருமானத்திற்கு அதிகமாக ரூ.150 கோடிக்குச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மாதப்பூர், காணாமேட்டில் உள்ள மேக்னஸ் லேக் வியூ குடியிருப்பைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவர் மின்சார வாரியத்தில் என்ஜினீயராகப் பணிபுரிந்து வந்தார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் இவர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பினாமி வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்

இதனால், மின் இணைப்பு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்குக் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கி வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பல்வேறு புகார்கள் சென்றன. புகாரின் அடிப்படையில், நேற்று ஒரே நேரத்தில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் அவரது பினாமிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், சங்கரெட்டி மாவட்டம், பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் பினாமி சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

அம்பேத்கரின் வங்கிக் கணக்குகள், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அம்பேத்கரை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.