இந்தியா

“பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு

   “பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த விதம், நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பேசுபொருளானது. வழக்கமாக அமைதியான முறையில் நடைபெறும் கேள்வி நேரம், அமித்ஷாவின் பதில்களால் சூடுபிடித்தது.

எதிர்க்கட்சிகள் அதிருப்தி

குறிப்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டின் பாதுகாப்பு, எல்லைப் பிரச்னைகள், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமித்ஷா, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அழுத்தமாக எடுத்துரைத்தார். சில பதில்கள் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பல கேள்விகளுக்கு அவர் அளித்த விளக்கங்கள் ஆளும் தரப்பினரை உற்சாகப்படுத்தின.

அமித்ஷாவின் பதில்கள் ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தின் இந்த விவாதங்கள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். விலைவாசி உயர்வு குறித்து அவர் அளித்த பதில்கள், சாமானிய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க உதவுமா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், எல்லைப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்களின் அச்சத்தைப் போக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


பிரதமர் மோடி அமைதியாக இருக்கப் போவதில்லை

இந்த நிலையில் இன்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு இன்று பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திராகாந்தி அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கத் தவறி விட்டது. காங்கிரஸ் பிரதமர்களைப் போல பிரதமர் மோடி அமைதியாக இருக்கப் போவதில்லை. ஜவஹர்லால் நேரு அரசால் மறக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை மோடி அரசு செய்து வருகிறது. காங்கிரஸ் அரசுகளைப் போல அல்லாமல் பயங்கரவாதிகளை பிரதமர் மோடி தண்டித்து வருகிறார். இந்தியாவின் 80% நீர் வளத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியவர் ஜவஹர்லால் நேரு. சீனா மீது காங்கிரஸ் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சீனாவுக்கு எதிராக மிதமான போக்கில் ஜவஹர்லால் நேரு நடந்து கொண்டதாகவும், சீனா உடனான நேருவின் ஆதரவு இந்தியாவை கடுமையாக பாதித்ததாகவும் ஜவஹர்லால் நேரு செய்ததையே ராஜீவ் காந்தியும் பின்பற்றியதாக தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதில்

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க காங்கிரஸ் அரசு மறந்து விட்டது. பாகிஸ்தானின் இதயத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழித்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் நாங்கள் கொன்றோம் என அமித்ஷா தெரிவித்தார்.