இந்தியா

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

 வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது
சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகின்றது.

சிலிண்டர் விலை குறைவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதில் மாதத்தின் முதல் தேதியில் கியாஸ் சிலிண்டர்களி விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளாக இன்று, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் குறையவில்லை

அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.25 குறைந்து ரூ.1,881க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.20 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.25 குறைந்துள்ளது ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.