ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர்.மேலும் 200 பேர் மாயமாகி உள்ளனர்.
60 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிஷ்துவார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. கிஷ்துவாரிலிருந்து 60 கி.மீ தொலைவில் 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று பகல் 12 மணி முதல் 1 மணி அளவில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்தது.
இதன்காரணமாக 8 கி.மீ தூரத்தில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்லச் சோசிட்டி கிராமத்தில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதில் 60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய அல்லது மண்ணில் புதைந்த மக்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
200க்கும் மேற்பட்டோர் மாயம்
கிஷ்துவாரில் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் 500க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக நான் நம்புகிறேன், மேலும் சில அதிகாரிகள் இந்த எண்ணிக்கை 1,000ஐத் தாண்டக்கூடும் என்று கூறுகிறார்கள் என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார். கிஷ்துவார் மழை வெள்ளத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அப்துல்லா, மேக வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். வானிலை (முன்னறிவிப்பு) பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
மீட்புப் பணிகள் தீவிரம்
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் நிலைமை மற்றும் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கியதாகவும் உமர் அப்துல்லா கூறினார். தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து பெரிய அளவிலான மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சஷோதி கிராமத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள குலாப்கர் பத்தாரில் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு உதவ ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மையத்தை அமைத்துள்ளது. உதவி எண்கள்: 9858223125, 6006701934, 9797504078, 8492886895, 8493801381, மற்றும் 7006463710