சினிமா

‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!
Trailer release of the film 'Kingdom'
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து இவர் நடித்த ’தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், தற்போது இவர் ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள 'கிங்டம்' திரைப்படம், இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.

இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில், படம் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, ‘கிங்டம்’ படம் ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று இரவு வெளியிட்டது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி நேற்று திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்றது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.