சினிமா

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியான படைத்தலைவன் மற்றும் மார்கன்

‘படைத்தலைவன்’ மற்றும் ‘மார்கன்’ திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியான படைத்தலைவன் மற்றும் மார்கன்
Padaithalaivan & Morgan were released on OTT
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனின் 'படைத்தலைவன்', விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஆகிய திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான 'படைத்தலைவன்' திரைப்படம், கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில், காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் 'படைத்தலைவன்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்த் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

விஜயகாந்த் வரும் காட்சிக்கு திரையரங்குகளில் வரவேற்பு கிடைத்த நிலையில், படம் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் இன்று டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’

மறுபுறம், விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' திரைப்படமும் இன்று OTT தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'அட்டக்கத்தி', 'பீட்சா' போன்ற படங்களின் எடிட்டராகப் பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவான 'மார்கன்', கடந்த மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மார்கன்' திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.