நடிகர் விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' மற்றும் வடிவேலு - ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
'தலைவன் தலைவி' - முதல் நாள் வசூல்!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யோகிபாபு, ரோஷினி பிரகாஷ், தீபா சங்கர், மைனா நந்தினி, ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணவன் - மனைவி உறவில் ஏற்படும் சிக்கலை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'தலைவன் தலைவி' திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மாரீசன்' -முதல் நாள் வசூல்!
அதேபோல், 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஆறு மனமே' படத்தை இயக்கிய சுதீஷ் சங்கர், 'மாரீசன்' படத்தை இயக்கியுள்ளார். மறதி நோயுடைய வடிவேலுவை ஏமாற்றி பணம் பறிக்க முயலும் ஃபஹத் ஃபாசில் மற்றும் இருவருக்கும் இடையிலான பயணத்தை பேசும் சஸ்பென்ஸ் நிறைந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'மாரீசன்' திரைப்படம் தனது முதல் நாள் வசூலாக சுமார் ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.