சினிமா

திரையரங்கில் வெளியான ரெட்ரோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியானது. ரெட்ரோ திரைப்படத்தினை ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

திரையரங்கில் வெளியான ரெட்ரோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. இந்தப் படத்தின் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த ரெட்ரோ திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டோன்பெஞ்ச் மற்றும் 2டி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் தற்போதைய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் சூழலில், ரெட்ரோ திரைப்படம் சூர்யாவிற்கு கம்பேக் கொடுப்பாரா என்று காத்திருந்த ரசிகரக்ளுக்கு, இப்படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்தும் பேண்ட் வாத்தியங்களுக்கு நடனமாடி, சூர்யா புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

மே 1 விடுமுறை தினத்தை விட்டு திரைப்படம் வெளியானதால் கேரளமாக ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்து திரைப்படம் கண்டு வருகிறார்கள். தொடர்ந்து பாசிட்டிவான விமர்சங்கள் வருவதால், அடுத்தடுத்த நாட்களில் திரைப்படத்தைக்காண ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது