நடிகர் நானி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தெலுங்குத் திரைப்படம் 'கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி'. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம், ரூ.60 கோடி வரை வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன் மற்றும் அவரை நிரபராதியாக்கப் போராடும் வழக்குரைஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உட்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகி பலரிடமும் ஆதரவைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றியிருந்தார். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகர்கள் தேர்வு முடிவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 'கோர்ட்' படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரங்களில், தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் ஹிரித்திக் மற்றும் நடிகை தேவயானியின் மகள் இனியா ஆகியோர் நடிக்கவுள்ளார்கள் என கூறப்படுகிறது. மேலும், சாய் குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜனும் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தமிழ் ரீமேக்கை தியாகராஜனும், ஃபைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான 'கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படம், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.