சினிமா

'குபேரா' புதிய போஸ்டர் வெளியீடு: ட்ரெய்லர் நாளை வெளியாகிறது!

பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'குபேரா' புதிய போஸ்டர் வெளியீடு: ட்ரெய்லர் நாளை வெளியாகிறது!
'குபேரா' புதிய போஸ்டர் வெளியீடு: ட்ரெய்லர் நாளை வெளியாகிறது!
தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என திரையுலகைன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த திரைப்படம், பலம் வாய்ந்த நடிப்பு மற்றும் மாஸ், கிளாஸ் கலந்த கதை கதைக்களத்தில் உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'குபேரா' படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூன் 14) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, படக்குழுவினர் இன்று ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் தனுஷ் சோகமான முகத்துடன் வாழ்க்கையே வெறுத்தது போல் வானத்தை பார்த்தவாறு நிற்கிறார். அவருக்கு பின் நாகர்ஜூனா மாஸ் லுக்கில் தோன்றுகிறார். ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் பறப்பது போலவும், பின்னணியில் பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா சோகமான முகத்துடன் காட்சியளிக்கிறார். போஸ்டரின் பிண்ணனியில் மும்பை போன்ற தொழில் நகரத்தில், மின்சாரம் பாயும் நகரத்து சூழல், தீவிரக் காட்சி அமைப்புகள் போன்றவை அமைந்துள்ளது.

குபேரா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் சேர்ந்து பணியாற்றும் இந்த படம், வணிகத்தையும், கலையையும் ஒருங்கே கையாளும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ்' மற்றும் 'ஏஷியான் சினிமாஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'குபேரா', தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் ஓவியக் காட்சிகளோடு சமூகவழிகள், அரசியல் மற்றும் பணமதிப்பு என்ற பரந்த அம்சங்களை தாங்கும் சர்வதேசத் தரத்தில் உருவாகும் சினிமாவாகும் என இயக்குநர் சேகர் கம்முலா குறிப்பிட்டுள்ளார்.

படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.

ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.