சினிமா

ரூ.100 கோடி வசூலை கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படம்!

நடிகர் தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரூ.100 கோடி வசூலை கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படம்!
Tere ishq mein Box Office
நடிகர் தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான இந்தித் திரைப்படமான 'தேரே இஷ்க் மே' படத்தின் உலகளாவிய வசூல் ரூ.100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் வசூல் நிலவரம்

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவான 'தேரே இஷ்க் மே' திரைப்படம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், உலக அளவில் இந்தப் படம் மொத்தமாக ரூ.118.76 கோடி வசூலித்தாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியில் வெளியான முதல் 3 நாட்களில் இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்திருக்கிறது. மொத்த உலகளாவிய வசூலும் ரூ.70 கோடியைத் தொட்டிருந்தது.

இந்தி மற்றும் தமிழ் வரவேற்பு

இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்திய இந்தி திரையுலக நடிகர்கள் சிலரின் படங்கள் கூட இந்தளவுக்கு வசூல் செய்யாததே இந்த வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும், சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.4 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்திருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் படக்குழுவினர் கவலைப்படாமல், இந்தி வசூலை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தனுஷின் முந்தைய படமான 'இட்லி கடை' திரைப்படம் வணிக ரீதியாகச் சுமாரான வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.