அடுத்த படம்
'லப்பர் பந்து' திரைப்படம் வெளியாகி ஓராண்டு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இயக்குநர் தமிழரசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "லப்பர் பந்து வெளியாகி என்னை ஊக்கமளித்த இந்த நாளில், ஊருக்கே தெரிந்த அந்த அப்டேட்டை நானும் சொன்னால்தான் உங்களுக்கும், அந்த நாளுக்கும் நான் செய்யும் நன்றியாக இருக்கும்! என்னுடைய அடுத்த படம் தனுஷ் சாருடன் தான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கதை சொல்லும்போது என் பதற்றத்தை பொறுத்துக் கொண்டதற்கு, தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி" என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
'வதந்தி' உண்மையானது!
இருப்பினும், தனுஷுடனான தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தமிழரசன் பச்சமுத்து முன்னரே சூசகமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற 'இட்லி கடை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியபோது, "என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இடம் பார்க்கத்தான் இங்கு வந்தேன். தனுஷின் அடுத்த படத்தை நான்கூட இயக்கலாம். இதை 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாகக்கூட இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்று அவர் குறிப்பிட்ட 'வதந்தி' இன்று உண்மையாகியிருப்பது, தனுஷ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??… pic.twitter.com/ToEDCx6csf
— Tamizharasan Pachamuthu (@tamizh018) September 20, 2025