காகிதத்தையும், காகிதத்தால் உருவாக்கப்படும் பொருட்களையும் 5% ஜிஎஸ்டி வரி அடுக்குக்குக் கொண்டுவரப் பரிசீலிக்குமாறு, தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதுரையில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 திட்டத்திற்கு நன்றி தெரிவித்த அச்சங்கத்தினர், தங்களது கோரிக்கை மனுவில், காகிதத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காலண்டர்கள், டைரிகள், திருமண அழைப்பிதழ்கள் போன்ற பொருட்களுக்கு வெவ்வேறு வரி அடுக்குகள் (18%, 5%, 0%) நிர்ணயிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
இந்த வரிவிதிப்பு, அச்சகத் தொழில் நிறுவனங்கள் ஆரோக்கியமாகச் செயல்படுவதைக் கடினமாக்குவதாகவும், பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, குறு, சிறு தொழில் நிறுவனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காகிதம் மற்றும் காகிதத்தால் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் ஒரே சீராக 5% வரி அடுக்கிற்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி மற்றும் பாரத மாதா ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான காலண்டர், அச்சங்கத்தினர் சார்பில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.