நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் டிரைலர், கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் விழாவில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷின் வருகையை ஒட்டி, சுமார் 7,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அலை கடலெனத் திரண்டு, டிரைலர் வெளியான போது விண்ணை அதிரவைக்கும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர். இந்த மெகா நிகழ்வு, கோவையின் அரசியல் மற்றும் சினிமா பரபரப்புக்கு ஈடாக அமைந்தது.
டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ், அவருடன் நடித்துள்ள நடிகை நித்யா மேனன், பிரபல நடிகர்களான சத்யராஜ், பார்த்திபன், திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இது படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை சேர்த்தது.
வணிக வளாகத்தின் திறந்தவெளிப் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், டிரைலரின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களால் விசிலடித்தும், கைத்தட்டியும், நடனமாடியும் கொண்டாடப்பட்டது. இது, ‘இட்லி கடை’ திரைப்படம், தனுஷின் வெற்றிப்பட வரிசையில் இணையும் என்பதை வெளிக்காட்டுவதோடு, வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.