சினிமா

என்னப்பா இப்படி சொல்றாரு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.. ஷாக்கான ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

என்னப்பா இப்படி சொல்றாரு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.. ஷாக்கான ரசிகர்கள்
என்னப்பா இப்படி சொல்றாரு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.. ஷாக்கான ரசிகர்கள்
’மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக உருவெடுத்தவர் லோகேஷ் கனகராஜ். ஒரே இரவில் நடக்கும் ஒரு வித்தியாசமான திரைக்கதையை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ‘கைதி’, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’, கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’, போன்ற படங்களை இயக்கி பல முன்னணி இயக்குநர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

அதிலும், ‘விக்ரம்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து, இவர் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) என்ற ஒரு அடிப்படையின் கீழ் அனைத்து படங்களையும் அவர் இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “கூலி திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் பங்கேற்க உள்ளதால் சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘லியோ’ படத்தின் போதும் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.