ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
'கூலி' படக்குழு மற்றும் இசை
'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் இசை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆரம்பம் முதலே உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
பாடல்களின் அமோக வரவேற்பு
படத்தின் முதல் பாடலான 'சிக்கிடு வைப்..' டி. ராஜேந்தரின் வித்தியாசமான குரலில், அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு இணைந்து பாடி, அறிவு வரிகள் எழுதியிருந்த நிலையில், வெளியாகி இணையத்தில் தாறுமாறாக வைரலானது. இதைத்தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டேவின் துள்ளலான நடனத்தில் வெளியான 'மோனிகா..' பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகி அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு பாடல்களின் வெற்றியும் படத்திற்கான ஹைப்பை மேலும் தூண்டியது.
ட்ரெய்லர் வெளியீடு
ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான 'கூலி' படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரின் அதிரடி காட்சிகள், வசனங்கள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக, ட்ரெய்லரின் இறுதியில், 'பாட்ஷா' படத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது, நீண்ட நாட்களாக ரஜினியின் பழைய ஸ்டைலைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
சாதனை படைத்த 'கூலி' ட்ரெய்லர்
இந்த நிலையில், 'கூலி' படத்தின் ட்ரெய்லர், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் மாபெரும் வெற்றிப்படமான 'ஜெயிலர்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 10.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. ஆனால், 'கூலி' படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 14.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று 'ஜெயிலர்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
'கூலி' படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இது படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.