சினிமா

நாஞ்சில் விஜயன் மீது அளித்த புகார் வாபஸ்: சமரசமான திருநங்கை நடிகை!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கொடுத்த புகாரை திருநங்கை நடிகை வாபஸ் பெற்றுள்ளார்.

நாஞ்சில் விஜயன் மீது அளித்த புகார் வாபஸ்: சமரசமான திருநங்கை நடிகை!
Complaint against Nanjil Vijayan withdrawn
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை துணை நடிகை ஒருவர் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை அடுத்து, அவர் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

புகார் மற்றும் காவல்துறை விசாரணை

சின்னத்திரை நடிகரான நாஞ்சில் விஜயன், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்துவிட்டதாக ஒரு திருநங்கை துணை நடிகை, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

புகார் வாபஸ்

இந்த நிலையில், தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும், சமாதானமாகச் செல்வதாகவும் கூறி, திருநங்கை நடிகை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார்.

மேலும், சமாதானமாகப் போவதாக அவர் எழுதி கொடுத்த நகலை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.