ஆட்டோகிராஃப் திரைப்படம்
இயக்குநர் சேரன் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. ஆட்டோகிராஃப் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை காதலர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
ஆட்டோகிராஃப் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம், சிறந்த பின்னணி பாடகர் ( சித்ரா – ஒவ்வொருப் பூக்களுமே..), சிறந்த பாடலாசிரியர் (பா.விஜய் – ஒவ்வொருப் பூக்களுமே) உள்ளிட்ட 3 பிரிவுகளில் தேசிய விருது வென்றது.
மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த நிலையில், ஆட்டோகிராஃப் திரைப்படம் 21 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. வருகிற மே 16ம் தேதி ஆட்டோகிராஃப் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.இது குறித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஆட்டோகிராஃப்பின் மறு வெளியீட்டுத்தேதியை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மே 16 முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்” என பதிவிட்டுள்ளார்.
சினிமா
ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி...சேரன் கொடுத்த அப்டேட்
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.