நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’, ‘கண்ணாடி பூவே’ போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிலும், ‘கனிமா’ பாடலில் பூஜா ஹெக்டே போட்ட ஸ்டெப்புகளை இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டோ தீவிரமாக ஈடுபட்டதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Get Ready for a @sidsriram x @shanvdp x @Music_Santhosh x @Lyricist_Vivek FIREWORKS💥💥💥#TheOneSong from tomorrow #Retro #TheOne#LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/W5K7FmAcpf
— karthik subbaraj (@karthiksubbaraj) April 11, 2025