சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படப்பிடிப்புக்காக ரெடியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினியின் 171வது படமான இதன் டைட்டில் டீசர், சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனையடுத்து ஜூன் 10ம் தேதியே வேட்டையன் ஷூட்டிங் என சொல்லப்பட்டது. ஆனால், திடீரென கூலி படப்பிடிப்பை ஒத்திவைத்த லோகேஷ், இரு தினங்களுக்கு முன்னர் அதுகுறித்து அப்டேட் கொடுத்திருந்தார். ரஜினிக்கு ஹேர் ஸ்டைல் செய்த போட்டோவை ஷேர் செய்து, ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவித்திருந்தார். இதனால் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து கூலி படத்தின் அப்டேட்கள் வெளியாகும்.
இன்னொரு பக்கம் ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளதால், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ஒரு படத்திற்காக 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது உறுதியில்லாத தகவல்கள் தான் என்றாலும், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ரஜினியும் விஜய்யும் தான் உச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் அதிகமாக இருப்பதாகவும், அதனை அவர்கள் குறைக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் அடிக்கடி கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. விரைவில் இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மீட்டிங் போட்டு சில முடிவுகள் எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவாகரம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக பங்கேற்று வருகிறார் கமல்ஹாசன். இன்னொரு பக்கம் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள கல்கி திரைப்படமும் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில், கமலின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் செமையாக ரீச் ஆகியுள்ளது. கல்கியை தொடர்ந்து இந்தியன் 2 ரிலீஸாகவிருப்பது கமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் தான் ரஜினியின் சம்பளம் குறித்தும் கட் & ரைட்டாக பேசியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தாங்கள் தயாரிக்கும் படத்தில் ரஜினி தான் ஹீரோ என தயாரிப்பாளர் விரும்பினால், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். ரஜினியின் சம்பளம் அதிகம் என நினைத்தால், வேறு ஹீரோவை வைத்து படம் தயாரிக்கலாம். ரஜினியும் நானும் சம்பளம் பார்த்து நடிப்பதில்லை, எங்களுக்கு கதை தான் முக்கியம் என அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார். கமல் ஹீரோவாக மட்டுமில்லாமல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்து வரும் அவர், அடுத்து சிம்புவின் STR 48 படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதனால் ரஜினி சம்பளம் பற்றிய கமலின் கருத்து, தயாரிப்பாளரின் அனுபவமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வெளியான கல்கி படத்தில், இரண்டே சீன்கள் மட்டுமே நடித்துள்ள கமல், அதற்காக 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஒரு நடிகரின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தால், தயாரிப்பாளர்கள் தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து பெரிய ஸ்டாராக்கி விடுகிறார்கள் என குற்றச்சாட்டு இருக்கிறது. ஆயிரம், லட்சங்கள் என்றிருந்த சில நடிகர்களின் சம்பளம், இப்போது கோடிகளில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.