சினிமா

வெறித்தனம்.. Fan boy செய்த சம்பவம்.. Box Office-யை கலக்கிய ‘குட் பேட் அக்லி’

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெறித்தனம்.. Fan boy செய்த சம்பவம்.. Box Office-யை கலக்கிய ‘குட் பேட் அக்லி’
வெறித்தனம்.. Fan boy செய்த சம்பவம்.. Box Office-யை கலக்கிய ‘குட் பேட் அக்லி’
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, யோகிபாபு, பிரியா வாரியர், சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் நொடிக்கு நொடி அஜித்தின் ரசிகனாகவே இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை முற்றிலும் ஒரு Fan Boy-யின் சம்பவம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியான முதல் நாளே இப்படம் முழுவதும் இணையத்தில் கசிந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’, ‘விடாமுயற்சி’ போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் அஜித்திற்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவர் கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

வசூல் அப்டேட்

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ’தரமான சம்பவம்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.