சினிமா

தமிழகத்தில் பட்டையை கிளப்பிய ‘குட் பேட் அக்லி’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டையை கிளப்பிய ‘குட் பேட் அக்லி’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, யோகிபாபு, பிரியா வாரியர், சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் நொடிக்கு நொடி அஜித்தின் ரசிகனாகவே இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை முற்றிலும் ஒரு Fan Boy-யின் சம்பவம் என ரசிகர்கள் கொண்டாடினர். ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் அப்டேட்

இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியான 2 வாரத்தில் தமிழ்நாட்டில் ரூ.172 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.