சினிமா

சூர்யாவுக்கு முன்னாடி six pack வச்சவன் யார் இருக்கா? நடிகர் சிவகுமார் பெருமிதம்

'ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

சூர்யாவுக்கு முன்னாடி six pack வச்சவன் யார் இருக்கா? நடிகர் சிவகுமார் பெருமிதம்
சூர்யாவுக்கு முன்னாடி six pack வச்சவன் யார் இருக்கா? நடிகர் சிவகுமார் பெருமிதம்
நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’, ‘கண்ணாடி பூவே’, ’தி ஒன்’ என 3 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன.

நேற்று சென்னையில் நடந்த ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் 3 பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. ஆக்‌ஷன், அதிரடி, காதல் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா குறித்து அவரது தந்தை சிவகுமார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “22 வயது வரை சூர்யா என்னோட படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. முழுமையான நடிகனாக வேண்டும் என்பதற்காக தினமும் நடனதுக்கும், சண்டைக்கும் பயிற்சி எடுத்துக்கொள்வார். உடம்பை போட்டு வருத்தி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் யார் இருக்கிறார்கள்.

சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள். அதன் பிறகும் யாராது வைத்திருக்கிறார்களா? ஆனால், அது தவறு என்று அதன் பின்னர் அறிவுரை வழங்கியதும் சூர்யா தான். இந்த மாதிரி எல்லாம் செய்து 28 வருடத்திற்கு பிறகு சூர்யாவை ஒரு மகத்தான நடிகராக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும் கார்த்திக் சுப்பராஜ் உட்பட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.