Breaking news

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.