தமிழ்நாடு

வீடுதோறும் ரூ.200க்கு இன்டர்நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

வீடுதோறும் ரூ.200க்கு இன்டர்நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
ரூ.200ல் இன்டர் நெட் வசதி

தமிழக சட்டசபையில் இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்குவது போல 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணம் பெரும் வகையில் இன்டர்நெட் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் மூலமாக கேபிள் டிவி சேவை செய்வது போல்,இணைய வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

1.2 கோடி பேர் பயன்

இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 4700 கிராம பஞ்சாயத்துகளில் இன்டர்நெட் வசதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளது.

கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கு வருகிறது” என தெரிவித்தார்.