ஆன்மிகம்

செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

 செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!
பால்நல்லூர் செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பால்நல்லூர் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மங்கல இசையோடு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை,லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு முதல் கால யாக சாலை பூஜைகளும் அன்று மாலை நடைபெற்றது.

அதணை தொடர்ந்து இரவு பரதநாட்டியம் நடைபெற்றது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அன்று சோமகும்ப பூஜை,யாக பூஜைகள் நாடி சந்தானம் பூர்ணாஹாதி நடைபெற்று அன்று இரவு சன் சிங்கர் இசை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜையும், அதனை தொடர்ந்து பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நதிநீர் அடங்கிய குடம் புறப்பாடு நடைபெற்று விமான கும்பாபிஷேகமும், மூலவர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று விசேஷ தீபாராதனைகள் நிறைவு பெற்றது. மேலும் கிரேன் இயந்திரம் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆலய நிர்வாகிகள் சுப்பிரமணி,சேகர், ஜெயசீலன்,பாபு, ஜெயகாந்தன், ஆகியோர் ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் நேரு, பாமக மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கோபி ஆகியோர் ஏராளமான பொதுமக்களுடன் பங்கேற்றனர். மேலும் ஆலைய நிர்வாகிகள் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.