Nallur Kalyanasundareswarar Temple : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் நல்லூர் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதாகும். கைலாசத்துக்கு இணையான இந்த ஆலயத்தில் வழிபட்டால் கைலாசத்திற்கு வந்து வழிபட்ட பூரண பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கையா உள்ளது. கைலாசத்தில் நடக்கக்கூடிய திருமணத்தை நாம் சென்று பார்க்க முடியாது ஆனால் இந்த ஆலயத்தில் நேரடியாக பார்க்க முடியும். இயற்கையான மலை மீது சுவாமி எழுந்தருளி உள்ளார். அகஸ்திய பெருமாளுக்கு முதன் முதலில் காட்சி காட்டிய தலமாகவும் இத்தலம் விளங்கி வருகிறது. சுவாமி மற்றும் அம்பாள் திருமண கோலத்திலும் சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகளும் திருமணத்தை நடத்தி வைப்பது போன்ற காட்சி சிறப்பு பெற்றதாகும். இங்கு மட்டுமே ஒரே ஆவுடையாரில் 2 லிங்கம் உள்ளதை காண முடியும். இங்கு உள்ள லிங்கம் பஞ்சபூதங்கள் சேர்ந்த லிங்கமாகும். கோயிலில் லிங்கத்தை பார்க்கும்போது பஞ்சபூதங்களை நேரடியாக பார்க்கும் நிலை ஏற்படும். மேலும் இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் மாறக்கூடியது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். பிறவி பலன் இருந்தால் மட்டுமே இங்கு தரிசனம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் ஆகியவையும் சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய 4 கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தெற்கு வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னதி அமைந்துள்ளது. மாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளார். இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகரான காசிப் பிள்ளையார் உள்ளார். தென்மேற்கு மூலையில் 7 மாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியோருடன் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.
மேலும் படிக்க: "ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!
திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் செய்யப்பட்ட இத்தலத்தில், இயற்கையாகவே சுந்தரகிரி மலையின் மீது 36 படிகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்துடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 36 படிகளை கடந்து விட்டால் முக்தி நிலைக்கு செல்ல முடியும். இந்த ஸ்தலத்தில் ஏழு கடல்களும் சந்திக்கின்ற 63 நாயன்மார்களில் ஒருவரான அமர் நீத நாயனாரும் இங்கு ஆட்கொண்டுள்ளார். காளியம்மன் உக்கிரமாக காட்சியளிக்க கூடிய அம்மன் ஆவார். ஆனால் இந்த தளத்தில் உள்ள காளிகாம்பாள் சாந்த சொரூபமாக காட்சியளிப்பது சிறப்புகளைக் கொண்டதாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டு சென்றால் பிறவி பலன் உண்டு என்று கூறப்படுகிறது.