ஆன்மிகம்

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களே.. உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (5.6.2025 - 18.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களே.. உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்!
horoscope predicted by astrologer shelvi
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை, பரிகாரங்களை (5.6.2025 - 18.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம்: எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமைக்கு உரிய பெருமைகள் வந்து சேரும்க. புதிய பொறுப்புகளும் அதனால ஆதாயமும் கிட்டும்க. சிலருக்கு முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்க. இல்லத்துல விடியல் வெளிச்சம் பரவும்க. விலகி இருந்த உறவும் நட்பும் மீண்டும் வரும்க. தந்தைவழி உறவுகளால ஆதாயம் அதிகரிக்கும்க. வழக்குகள் சாதகமாக தீர்வாகும்க. ஆடை, ஆபரணம், வீடு, மனை சேரும்க. வர்த்தகத்துல வளர்ச்சி அதிகரிக்கும்க. புதிய ஒப்பந்தங்கள்ல நிதானம் முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. இந்த சமயத்துல யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம்க. அவசியமற்ற பயணங்களைத் தவிருங்க. வயிறு, ஜீரணக் குறைபாடு, பல் உபாதைகள் வரலாம்க. துர்க்கையைக் கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்.

ரிஷபம்: அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கும் காலகட்டம்க. இந்த சமயத்துல எதுலயும் அவசரமும் அலட்சியமும் மட்டும் கூடாதுங்க. பணியிடத்துல உங்க திறமை பாராட்டப்படும்க. உங்க தனிப்பட்ட பொறுப்புகள்ல, நேரடி கவனம்தான் நல்லதுங்க. இடமாற்றம் வந்தால், மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விடியல் வெளிச்சம் பரவும்க. குடும்பத்து ரகசியங்களை யாரோடும் பகிர்ந்துக்க வேண்டாம்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அவசியம் கேளுங்க வாரிசுகள் கிட்டே வீண் சினம் தவிருங்க. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தருவது, பெறுவதைத் தவிருங்க, செய்யும் தொழில்ல சோம்பல் இல்லாம செயல்படுங்க. அயல்நாட்டு வர்த்தகத்துல சட்டவிதிமுறைகளை முழுமையா கடைபிடிங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க வாக்கிலும் செயலிலும் அமைதியா இருங்க. வாகனத்தை ஓட்டும் போது செல்போனை அணைத்து வையுங்க. ரத்த நாள உபாதை, பரம்பரை நோய்கள் வரலாம்க. பைரவரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.

மிதுனம்: அமைதியாகச் செயல்பட்டா, ஆனந்தம் நிலைக்கக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல வீண் ரோஷமும் வெட்டி வாதமும் கூடாதுங்க. முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்க. கோபத்தை அடக்கினாலே வாழ்க்கை கோணலாகாம இருக்கும், உணர்ந்து நடந்துக்குங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. முதலீடுகளை நேரான பாதையில மட்டும் செய்யுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாழ்க்கைத் துணையால் பெருமை சேரும்க. குடும்பத்துல மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்க. வாகனம், வீடு புதுப்பிக்க சந்தர்ப்பம் வரும்க. குடும்பத்துப் பெரியவங்க வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. அரசு, அரசியல் சேர்ந்தவங்க, வார்த்தைகள்ல நிதானத்தைக் கடைபிடிங்க. மேலிடத்துக்கு எதிரான விளையாட்டுப் பேச்சையும் தவிருங்க. பயணப்பாதை நட்புகளிடம் விலகியே இருங்க. காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. இஷ்ட மகானைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.

கடகம்: வாக்கில் கவனம் இருந்தால் செல்வாக்கு உயரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க திறமை பளிச்சிடும்க. பொறுப்புகள் அதிகரிக்கலாம்க. வீண் வாதமும் வேண்டாத புலம்பலும் கூடாதுங்க. பிறர் தவறைப் பெரிசுபடுத்த வேண்டாம்க. குடும்பத்துல விட்டுக் கொடுத்தல் இருந்தா விசேஷங்கள் வரும்க. உறவுகளிடம் சிறு உரசலும் பெரும் விலகலுக்கு வழிவகுத்துடலாம்க. வாரிககளால பெருமை சேரும்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. செய்யும் தொழில்ல பெரும் முதலீட்டைத் தவிருங்க. பங்குவர்த்தகத்துல ஆழம் தெரியாம காலைவிட வேண்டாம்க. அரசியல், அரசு சார்ந்தவங்க யாருக்கும் ஜாமீன் தருவதை தவிருங்க. வாகனத்துல சிறிய பழுதையும் உடனே சரி செய்யுங்க. அஜீரணம், அடிவயிறு, அலர்ஜி உபதைகள் வரலாம்க. நரசிம்மரைக் கும்பிடுங்க. நல்லவை நடக்கும்.

சிம்மம்: தன்னம்பிக்கை இருந்தா தடையில்லா உயர்வு கிட்டும் காலகட்டம்க. அலுவலகத்துல அவசரமும் அலட்சியமும் வேண்டாம்க. நம்பிக்கையோட செயல்பட்டா, புதிய பணி வாய்ப்புகள் கைகூடும்க. உடனிருப்போர் விஷயங்கள்ல தலையிடுவதைத் தவிருங்க. இல்லத்துல நிம்மதி நிலவும்க. உங்க வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும்க. வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்க. சுபகாரியங்கள் கைகூடும்க. இளம் வயதினர் தன்னிச்சை முடிவுகளைத் தவிருங்க. செய்யும் தொழில்ல வளர்ச்சி சீராகும்க. புதிய முதலீடுகளை நேரடியா செய்யுங்க. அரசியல், அரசு சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. புறம்பேசும் நபர்களை புறம் தள்ளுங்க. பணத்தைக் கையாளும் சமயத்துல கவனமா இருங்க. தொலைதூரப் பயணத்துல உடைமைகளை பத்திரமா பார்த்துக்குங்க. மனக்குழப்பம், தூக்கமின்மை,களுக்கு உபாதைகள் வரலாம்க. பிள்ளையாரைக் கும்பிடுங்க. வாழ்க்கை பிரகாசிக்கும்.

கன்னி; பொறுப்புடன் செயல்பட்டால் உயர்வுகள் வரும் காலகட்டம்க. அலுவலகத்துல மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த திரை விலகும்க. எதையும் திட்டமிட்டும் நேரம்தவராமலும் செய்தா உங்க பெருமை நிலைக்கும்க. பணத்தை கவனமாகக் கையாளுங்க. வீட்டுல விசேஷங்கள் படிப்படியா வரத்தொடங்கும்க. பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. அசையும் அசையாப் பொருள் சேரும்க. வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் வேண்டாம்க. செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்தறது உத்தமம்க. செய்யும் தொழில்ல முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும்க. அயல்நாட்டு ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது கவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு நிதானம் முக்கியம்க. உடனிருக்கும் யாரிடமும் கோபமும் குதர்க்கமும் வேண்டாம்க. வாகனப் பயணத்துல போதுமான ஓய்வு அவசியம்க. கழிவு உறுப்பு, தோள்பட்டை, எலும்பு உபாதைகள் வரலாம்க. மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. மங்கலங்கள் சேரும்.