Arimalam Bullock Cart Race in Sri Sethumel Chella Ayyanar Temple : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டிற்கான கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நேற்று (ஆகஸ்ட் 10) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தப் போட்டி சிறிய மாடு, பெரிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பிரிவில் மொத்தம் 6 ஜோடி மாடுகளும், றிய மாட்டு வண்டி பிரிவில் மொத்தம் 17 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இதில் பெரிய மாட்டு வண்டிகள் போக வர 8 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டுவண்டி ஜோடிகள் போக வர 6 கிலோமீட்டர் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அரிமளத்தில் தொடங்கிய இப்போட்டி, தொடர்ந்து அரிமளம் முதல் கே.புதுப்பட்டி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 11 - பானு சப்தமி பதவி யோகம் யாருக்கு?
நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்தும் மாடுகள் சென்றன. இது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்போட்டியை காண புதுக்கோட்டை மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்றுதுள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளையும், அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.