தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Mar 8, 2025 - 12:54
 0
தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்
’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான இந்தி படம் ‘சாவா’. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் சமீபத்தில் ரிலீஸாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த 'லெஜிம்' நடனக் காட்சிக்கு மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

தொடர்ந்து, குஜராத்தில் ஒரு திரையரங்கில் சம்பாஜி கதாபாத்திரம் சித்ரவதைப்படுத்தப்படும் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஒருவர் ஆத்திரப்பட்டு திரையை கிழித்தார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் மாராஷ்டிரா போர்வீரர்களான கனோஜி ஷிர்கே மற்றும் கன்ஹோஜி ஷிர்கே ஆகியோரை தவறாக சித்தரித்துள்ளதாக அப்போர் வீரர்களின் 13-வது வாரிசான லஷ்மிகாந்த் ராஜே ஷிர்கே குற்றம் சாட்டினர்.  

இப்படி இப்படம் தொடர்பாக பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது வித்தியாசமான புதிய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, இப்படத்தில் முகலாயப் படைகள் மராத்தியர்களிடமிருந்து பொக்கிஷங்களைக் கொள்ளையடித்து அசிர்கார் கோட்டையில் மறைத்து வைத்ததாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த காட்சியை நம்பி அப்பகுதி மக்கள் அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக தங்க புதயலை தேடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதை பார்த்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீஸார் வருவதை அறிந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து சிட்டாக பறந்ததாக கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow