வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.