#JUSTIN || ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி
''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.
"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்
தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம்- அன்னபூர்ணா உணவக நிர்வாகம்.
'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திரைப்படத்தில் வில்லன்கள் தான் இப்படி செய்வார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி
தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம்
CM Stalin About Nirmala Sitharaman Issue : ''ஒரு தொழில் அதிபராக ஜிஎஸ்டி தொடர்பாக சந்தேகங்கள் எழுப்ப அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனுக்கு முழு உரிமை உள்ளது. அவருக்கு பதில் கூற வேண்டியது மத்திய நிதியமைச்சரின் கடமை. ஆனால் கேள்வி எழுப்பிய சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மத்திய அரசின், நிர்மலா சீதாராமனின் அதிகார வர்க்கத்தின் மனோபாவத்தையே காட்டுகிறது'' என்று பலரும் குற்றம்சாட்டினார்கள்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியுள்ளதாக எம்.பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.