Indian2 Box Office: ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறும் இந்தியன் 2
Indian 2 Day 1 Box Office Collection : கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.