K U M U D A M   N E W S

Court

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை? - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருட்டு: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்  நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் சட்டம்.. மாநில அரசுகளுக்கு அதிகாரம்... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

சிறையில் கைதி தாக்குதல் விவகாரம்: டிஐஜி ராஜலெட்சுமி சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING: கல்வராயன் மலை சாலை சீரமைப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி கல்வராயன் பகுதியில் வெள்ளிமலை சின்ன திருப்பதி சாலையை - 3 வாரங்களில் சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#BREAKING: வேலைநிறுத்த போராட்டம் '100 மில்லியன் டாலர் இழப்பு’ - சாம்சங் நிறுவனம்

தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் விவகாரம்: தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை... தொழிலாளர்கள் உறுதி!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு வழக்கில் புதிய திருப்பம்.... உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை..? நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சின்ன விஷயத்திற்கு வழக்கு போடுறீங்க.. உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் காட்டம்

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

#JUSTIN || தீட்சிதர் சஸ்பெண்ட்; சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

"சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

#BREAKING || "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநர் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலில் ரீல்ஸ் வீடியோ.. சாமிக்கு என்ன மரியாதை?.. பெண் தர்மகர்த்தாவுக்கு கண்டனம்

கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகை சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. ஹேம்நாத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

#BREAKING: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு; நீதிமன்றம் புதிய உத்தரவு | Kumudam News 24x7

ஜிஎஸ்டி வரி தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

#JUSTIN || வாக்கி டாக்கி வழக்கு - இளைஞருக்கு ஜாமின்

மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்