K U M U D A M   N E W S

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வேடனா? வேட்டையனா? மேலும் 2 பாலியல் புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

டாட்டூ போட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்

சோதனையில் 3 கிலோ கஞ்சா மற்றும் 104 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

Ryo Tatsuki: ஜூலை மாதம்.. மங்கா ஆர்டிஸ்ட் தட்சுகியின் கணிப்பு..அச்சத்தில் ஜப்பானியர்கள்!

ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞரான (manga artist) ரியோ தட்சுகி (Ryo Tatsuki) இன்னும் 3 மாதங்களில் மிகப்பெரிய பேரழிவை ஜப்பான் சந்திக்கும் என கணித்துள்ளார். அவரது முந்தைய கணிப்புகள் போல் இதுவும் பலிக்குமா? என பலர் அச்சமடைந்துள்ளனர்.