K U M U D A M   N E W S

ரூபாய்

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ரூபாய் குறியீடுக்கு பதிலா ’ரூ’ எழுத்து- பேசுப்பொருளாகிய தமிழ்நாடு பட்ஜெட் லோகோ!

தமிழ்நாடு அரசு 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையினை நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலட்சினையில் இந்தியாவின் ரூபாய் குறியீடு ” ₹ “ பதிலாக (ரூ) என்கிற எழுத்து இலச்சினையில் பயன்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!

வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.