K U M U D A M   N E W S
Promotional Banner

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நகை திருடிய போலி டாக்டர்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.