K U M U D A M   N E W S

பாமக

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தது- எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

"சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி அரசியல் செய்கிறார்"- கண்ணீர் சிந்திய ராமதாஸ்!

சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.

"விரைவில் மெகா கூட்டணி அமையும்"- அன்புமணி ஆருடம்!

விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர் தற்கொலை; திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

"பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் அன்புமணி"- ராமதாஸ் விமர்சனம்!

“எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் பலி: “இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?”- அன்புமணி கண்டனம்!

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தாதே நான்தான்"- அடித்துச் சொல்லும் ஜி.கே. மணி!

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமக உட்கட்சி விவகாரம்: டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ஜி.கே. மணி கிரிமினல் புகார்!

பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.

தந்தை - மகன் சண்டையால் மாம்பழம் சின்னத்துக்கு சிக்கல்!

பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

ஜி.கே.மணி தலைமையில் குழு: பாமகவை மீட்டெடுப்பேன்- ராமதாஸ் சபதம்!

அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.