K U M U D A M   N E W S

அதிகாரத்துக்கு எதிராகத் துணிச்சல் குரல்...மாணவர் அரசியலில் நேஹா போராவின் பயணம்!

உத்தரகாண்ட் கிராமப்புறப் பின்னணியில் இருந்து ஜேஎன்யூ மாணவர் அரசியல் களத்துக்கு வந்த நேஹா போரா, கல்வி உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இளம் தலைவராக உருவெடுத்துள்ளார்.

மேகமலை விவகாரம் : அரசை நோக்கி அடுக்கடுக்காய் கேள்விகள் ! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வெளியில் இருந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பு குறித்து முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளது.

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் 7 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்பு…பழங்குடி பெண் அசத்தல்

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ள பழங்குடி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

நாங்கள் குடிமக்கள் இல்லையா? .. ஜாதி சான்றிதழ் கேட்டு தரையில் அமர்ந்து பழங்குடியின தர்ணா போராட்டம்!

பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாதனை படைத்த பழங்குடியின மாணவர்.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த தந்தை

தேசிய சட்டக் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பழங்குடியின மாணவர் பரத்தின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என அவரது தந்தை செல்வகுமார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.