பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு
சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவன் ஆலயத்தில் வளர்க்கப்பட்ட மாடுகளை காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு. மாடுகளை தனியார் பசுக்கள் காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி
தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும். 6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
Heavy Traffic Jam in Chennai : தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
CM Stalin Arrived in Chennai : முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். அமெரிக்க பயணத்தின் போது 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது
Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin Met with Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Storm Warning Cage Number 1 in Chennai Port : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.