சென்னையில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். இன்று முதல் 3 நாளைக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் 12 காவல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை வட சென்னை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.
வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்கினால் நீர் உறிஞ்சும் மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் மூலம் நீரை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சென்னைக்கு வரவுள்ளன.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.